Tamil Month Rasi Palan Maasi 2013
2013
25
Nov
சோமங்கலம் காட்டில் பரபரப்பு மரத்தில் எலக்ட்ரீஷியன் சடலம் 10 நாளுக்கு முன் காணாமல் போனவர்


கூடுவாஞ்சேரி:சென்னை ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி பெரியார் நகரை சேர்ந்தவர் கமல்குமார் (39). தனியார் கம்பெனியில் எலக்ட்ரீஷியனாக இருந்தார். இவரது மனைவி திலகவதி (38). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடன் மற்றும் குடும்ப பிரச்னை காரணமாக கமல்குமார் வேதனையில் இருந்தார்.

கடந்த 15ம் தேதியில் இருந்து கமல்குமாரை காணவில்லை. இதுபற்றி அவரது மனைவி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்து இருந்தார். போலீ சார் வழக்குப்பதிவு செய்து கமல்குமாரை தேடி வந்த னர். இந்த நிலையில், சோமங்கலம் அடுத்த மேலாத்தூர் காப்புக் காட்டில் உள்ள மரத்தில் வாலிபர் உடல் தொங்குவதை நேற்றுமுன்தினம் அந்த பகுதி மக்கள் பார்த்தனர். உடனே சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று உடலை மீட்டனர். காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளவர்களின் பெயர் விவரங்களை பற்றி விசாரித்தனர்.

இதில் கமல்குமார் காணாமல்போனது பற்றி புகார் கொடுத்து இருந்தது தெரிந்தது. இதனால் சோமங்கலம் போலீசார், கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.இதையடுத்து போலீசார், கமல்குமார் மனைவியுடன் காப்புக்காட்டு பகுதிக்கு விரைந்தனர். உடலை பார்த்ததும் கணவர்தான் என்று கூறி திலகவதி கதறி அழுதார். இதன்பிறகு கமல்குமார் உடலை கைப்பற்றி மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

கடன் தொல்லையால் கமல்குமார் தற்கொலை செய்தாரா, கடன் கொடுத்தவர்கள் அடித்து கொன்று தூக்கில் தொங்கவிட்டார்களா என்ற கோணங்களில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran