வாகன சோதனையில் சவுடுமண் திருடிய 4 லாரிகள் பறிமுதல்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகேயுள்ள ஜீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து தமிழகத்துக்கு அனுமதியின்றி சவுடுமண் எடுத்துவருவதாக திருவள்ளூர் கலெக்டர் வீரராகவராவுக்கு தகவல் கிடைத்தது.
அவரின் உத்தரவின்படி ஊத்துக்கோட்டை தாசில்தார் கிறிஸ்துதாஸ் மற்றும் அதிகாரிகள் நேற்று, ஊத்துக்கோட்டை அண்ணா சிலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஆந்திராவில் இருந்து சவுடுமண் ஏற்றிவந்த 4 லாரிகளை பிடித்து விசாரித்தனர். அனுமதியின்றி சவுடு மண் எடுத்து வரப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அந்த 4 லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அனுமதியின்றி மணல் மற்றும் சவுடுமண் கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/22/2013 2:27:09 PM
-Updated 11/22/2013 2:27:01 PM
-Updated 11/22/2013 2:26:52 PM
-Updated 11/22/2013 2:26:43 PM
-Updated 11/22/2013 2:26:34 PM
-Updated 11/22/2013 2:26:25 PM
-Updated 11/22/2013 2:26:17 PM
-Updated 11/21/2013 3:28:21 PM
-Updated 11/21/2013 3:28:11 PM
-Updated 11/21/2013 3:27:48 PM
-Updated 11/21/2013 3:27:40 PM
-Updated 11/20/2013 2:35:56 PM
-Updated 11/20/2013 2:35:31 PM
-Updated 11/20/2013 2:35:22 PM
-Updated 11/20/2013 2:35:05 PM