தேர்தல் நிதியளிப்பு விழாவிற்கு திருவொற்றியூர் வரும் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
புழல்:திருவள்ளூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் செங்குன்றம் நெல் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் க.சுந்தரம், கே.பி.பி.சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணு, முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் முன்னிலை வகித்தனர். செங்குன்றம் நகர செயலாளர் ராஜேந்திரன், கிராண்ட்லைன் ஊராட்சி தலைவர் ஏழுமலை வரவேற்றனர். மாவட்ட பொ றுப்பாளர் சுதர்சனம் பேசினார்.
கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில், நாடாளுமன்ற தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருவொற்றியூரில் வரும் 15ம் தேதி நடைபெறுகிறது. 20ம் தேதி முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ஜெயபால் இல்ல திருமணம் நடைபெற உள்ளது. இவைகளுக்கு வருகை தரும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, அதிக நிதி வழங்குவது, ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் எம்பி ஆ.கிருஷ்ணசாமி, நிர்வாகிகள் பகலவன், விஸ்வநாதன், நீலகண்டன், மணிமேகலை, மேனகா நித்யானந்தம் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/13/2013 2:50:35 PM
-Updated 11/13/2013 2:50:23 PM
-Updated 11/13/2013 2:50:14 PM
-Updated 11/13/2013 2:50:03 PM
-Updated 11/13/2013 2:49:49 PM
-Updated 11/13/2013 2:49:30 PM
-Updated 11/13/2013 2:48:46 PM
-Updated 11/13/2013 2:04:25 PM
-Updated 11/12/2024 4:50:55 PM
-Updated 11/12/2024 4:50:46 PM
-Updated 11/12/2024 4:50:37 PM
-Updated 11/12/2024 4:50:25 PM
-Updated 11/12/2024 4:50:09 PM
-Updated 11/12/2024 4:49:58 PM
-Updated 11/12/2024 2:43:54 PM