Tamil Month Rasi Palan Maasi 2013
2013
11
Nov
செங்கல்பட்டில் புதர் மண்டி கிடக்கும் நர்சிங் மாணவிகள் விடுதி


செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவமனை நர்சிங் விடுதியில் புதர் மண்டி கிடக்கிறது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் மாணவிகள் அவதிப்படுகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் பிரிவில் 100 மாணவ, மாணவிகள், பிஎஸ்சி நர்சிங் பிரிவில் 100 மாணவ, மாணவிகள், ஸ்கூல் ஆப் நர்சிங் பிரிவில் 100 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான விடுதி அரசு மருத்துவமனை வளாகத்திலேயே உள்ளது. இங்கு குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் இல்லை.

மேலும் நர்சிங் படிக்கும் மாணவிகளின் விடுதி கட்டிடத்தை சுற்றிலும் முட்புதர்கள் நிறைந்து காடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் பாம்பு உள்பட விஷ ஜந்துக்கள் விடுதிக்குள் புகுந்து விடுகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நர்சிங் மாணவி ஒருவர் பாம்பு கடித்து இறந்தார். விடுதியில் குடிநீர் வசதி இல்லை. பாலாற்று குடிநீர் மருத்துவமனைக்கு வினி யோகம் செய்யப்படுகிறது. ஆனால், இங்குள்ள விடுதிகளுக்கு வழங்குவதில்லை.
இதனால் குடிக்க தண்ணீர் இல்லாமல் மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். காலை, மாலை நேரங்களில் ஜிஎஸ்டி சாலையை கடந்து சென்று அங்குள்ள பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்து வந்து பயன்படுத்துகின்றனர்.

இதுபற்றி மாணவிகள் கூறுகையில், இடஒதுக்கீடு அடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு நர்சிங் சேர்ந்துள்ளோம். எங்களுக்கு தனியாக விடுதி கட்டப்படாததால், நிலைய மருத்துவ அலுவலர் குடியிருப்பில் தங்கி படித்து வருகிறோம். இந்த வளாகத்தில் எவ்வித வசதியும் இல்லை. குடிநீர் வசதியில்லை. வெளியே சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. இதனால் வகுப்புக்கு சரியான நேரத்துக்கு செல்ல முடியவில்லை.

மேலும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் சாலையை கடப்பதில் பெரும் சிரமமாக உள்ளது. விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம். எனவே அடிப்படை வசதிகளுடன் எங்களுக்கு புதிதாக விடுதி கட்டி தர வேண்டும் என்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran