Tamil Month Rasi Palan Maasi 2013
2013
08
Nov
ஐயப்பன்தாங்கலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொள்ளை முயற்சி கட்டிட தொழிலாளி சிக்கினான்


பூந்தமல்லி:வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கழுத்தை அறுத்து இன்ஜினியர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. ஐயப்பன்தாங்கலில் நேற்று நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கல் அசோக் பிருந்தாவன் நகர் அபார்ட்மென்டில் வசிப்பவர் கணேஷ் (28). சாப்ட்வேர் இன்ஜினியர். தரமணியில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது அம்மா கமலா (56). மகனுடன் தங்கியுள்ளார். கணேஷ் மனைவி வளைகாப்பிற்காக தாய் வீட்டிற்கு போயிருந்தார்.

 நேற்று கமலா வீட்டில் தனியா இருந்துள்ளார். மாலை 5 மணியளவில் வாலிபர் ஒருவர் கதவை தட்டியுள்ளார். கமலா கதவை திறந்ததும் வீட்டின் உள்ளே வந்த அந்தநபர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். கமலா தண்ணீர் எடுத்து வர சமையல் அறைக்கு போனார். அப்போது பின்தொடர்ந்து சென்ற அந்த வாலிபர் கமலாவை மடக்கி பிடித்து கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். கமலா அலறினார். அவரது சத்தம் கேட்டு அந்த பிளாட்டை சேர்ந்தவர்கள் திரண்டனர். தப்ப முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து போரூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கமலாஆபத்தான நிலையில் போரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில் மூதாட்டி கழுத்தை அறுத்தவர் திருவண்ணாமலை மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் கமலநாதன் (28) என்பது தெரியவந்தது. கணேஷ் அபார்ட்மென்டிற்கு எதிரே கட்டிட வேலை நடந்து வந்தது. அங்கு வேலை பார்த்த போது கமலநாதன், கமலாவுடன் அன்பாக பேசி பழகி உள்ளார். வீட்டிற்கும் அடிக்கடி வந்து செல்வார்,  கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த கமலநாதன், கமலாவிடம் மருமகள் குறித்து விசாரித்துள்ளார். கமலா தனியாக இருப்பதை அறிந்ததும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு வீட்டில் உள்ள நகை பணத்தை கொள்ளையடிக்க கமலநாதன் முயன்றது தெரியவந்தது. கைதான கமலநாதனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் ஐயப்பன்தாங்கலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran