ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்த 20 லட்சம் அரசு நிலம் மீட்பு பயிர்கள் அழிப்பு
திருத்தணி:திருத்தணி அருகே வரவு கால்வாயை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டு இருந்த பயிர்களை அழித்து, 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.திருத்தணி அருகேயுள்ள விஜிஎன் கண்டிகை பகுதியில் உள்ள மலையில் இருந்து மழைநீர் செல்வதற்கு வரவு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயை ஆக்கிரமித்து கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளதாக திருவள்ளூர் கலெக்டர் வீரராகவராவுக்கு புகார்கள் சென்றன. அவரின் உத்தரவின்படி திருத்தணி ஆர்டிஓ கலைவாணி, டிஆர்ஓ செல்வமணி, தாசில்தார் செல்வகுமாரி, வருவாய் ஆய்வாளர் தேவராஜ், வட்ட சார் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் நேற்று அந்த இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் வரவு கால்வாயை ஆக்கிரமித்து பயிரிடப்பட்டுள்ளது தெரிந்தது.
இதையடுத்து, அந்த இடத்தில் உள்ள பயிர்களை அழித்தனர். வரவு கால்வாய் ஆக்கிரமித்து இருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்று பலகை வைத்தனர். வரவு கால்வாயை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/9/2025 2:38:02 PM
-Updated 11/9/2025 2:36:45 PM
-Updated 11/9/2025 2:36:30 PM
-Updated 11/9/2025 2:00:16 PM
-Updated 11/8/2025 2:46:11 PM
-Updated 11/8/2025 2:45:56 PM
-Updated 11/8/2025 2:45:12 PM
-Updated 11/7/2025 3:12:05 PM
-Updated 11/7/2025 3:11:56 PM
-Updated 11/7/2025 3:11:33 PM
-Updated 11/7/2025 3:11:24 PM
-Updated 11/7/2025 3:11:15 PM
-Updated 11/7/2025 3:11:04 PM
-Updated 11/7/2025 2:48:55 PM
-Updated 11/6/2025 2:56:59 PM