நீலாங்கரையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தாத்தா கைது
துரைப்பாக்கம்:சென்னை அடுத்த நீலாங்கரை அறிஞர் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் சுமதி. இவரது பேத்தி சாந்தி (12). (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). துரைப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள்.சுமதியின் 2வது கணவர் பால் (60). இவருக்கு சொந்தமான வீடு அதே பகுதியில் உள்ளது. சாந்தியிடம் நைசாக பேசி அவ்வப்போது தான் வசிக்கும் வீட்டுக்கு பால் அழைத்து செல்வாராம். அங்கு, சாந்திக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பலமுறை இதுபோன்று நடந்ததால் பள்ளி ஆசிரியை மற்றும் சக தோழிகளிடம் சாந்தி கூறி அழுதுள்ளார்.
இந்நிலையில் நேற்றும் இந்த தொல்லை நடந்ததால் வழக்கம் போல ஆசிரியையிடம் சாந்தி கூறியுள்ளார். உடனே அவர்கள், சென்னை பூங்கா நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு தெரியப் படுத்தினர். காப்பக நிர்வாகி முனியம்மாள் (55), துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் வழக்கு பதிந்து பாலை கைது செய்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/9/2025 2:38:02 PM
-Updated 11/9/2025 2:36:45 PM
-Updated 11/9/2025 2:36:30 PM
-Updated 11/9/2025 2:00:16 PM
-Updated 11/8/2025 2:46:11 PM
-Updated 11/8/2025 2:45:56 PM
-Updated 11/8/2025 2:45:44 PM
-Updated 11/7/2025 3:12:05 PM
-Updated 11/7/2025 3:11:56 PM
-Updated 11/7/2025 3:11:33 PM
-Updated 11/7/2025 3:11:24 PM
-Updated 11/7/2025 3:11:15 PM
-Updated 11/7/2025 3:11:04 PM
-Updated 11/7/2025 2:48:55 PM
-Updated 11/6/2025 2:56:59 PM