Tamil Month Rasi Palan Maasi 2013
2013
07
Nov
ஜெகதாபட்டினத்தில் மீனவர்கள் ஸ்டிரைக் 2வது நாளாக நீடிப்பு


கடந்த 3ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க 400க்கும் மேற்பட்ட படகுகள் சென்றன. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாபட்டினம் மீனவர்கள் 17 பேர், 4 படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. ஏற்கனவே கடந்த 14ம் தேதி 15 மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்று யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் அவர்களது விசைபடகுகளையும் உடனடியாக விடுவிக்க கோரியும், இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தை கண்டித்தும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 250க்கும் மேற்பட்ட விசைபடகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் போராட்டத்தில் ஜெகதாபட்டினத்தில் மீன் கொள்முதல் செய்பவர்கள், சில்லரை விற்பனை, மொத்த விற்பனை செய்வோர் என 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஐஸ்கட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டு ள்ளது. மீனவர்களை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran