தாம்பரம்:குழந்தைக்கு சோறு ஊட்டியபோது பெண்ணிடம் 6 பவுன் செயின் பறித்துக் கொண்டு தப்பிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தாம்பரத்தில் நடந்த இந்த நூதன சம்பவம் பரபரப் பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு தாம்பரம் டி.டி.கே. நகர் நைல் தெருவை சேர்ந்தவர் அருண். இவரது மனைவி லோகநாயகி (30). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சுரேகா (2). நேற்று மாலை வீட்டு வாசலில் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்து கொண்டிருந்தார் லோகநாயகி. குழந்தை சாப்பிடாமல் அடம் பிடித்தது. அப்போது, சிறிது தூரத்தில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரை காட்டி, ‘ஒழுங்கா சாப் பிடு.. இல்லாவிட்டால் அவரிடம் பிடித்து கொ டுத்து விடுவேன் என லோகநாயகி சாப்பாடு கொடுத்து கொண்டே இருந்தார். இதை அந்த வாலிபர் கவனித்து கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அந்த வாலிபர், இவர்கள் அருகே வந்தார். ‘ஒழுங்கா சாப்பிடு, இல்லாவிட்டால் பிடித்து கொண்டு போய்விடுவேன் என செல்லமாக குழந்தையை மிரட்டியுள்ளார். இதை லோக நாயகியும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் திடீரென லோகநாயகியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை அந்த வாலிபர் அறுத்து கொ ண்டு ஓடினார். அந்த நேரத்தில் ஒரு பைக் வந்தது. அதில் ஏறி அந்த வாலிபர் தப்பினார். இதை சற்றும் எதிர்பாராத லோகநாயகி, சத்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் இருவரும் மாயமாகி விட்டனர்.
சம்பவம் குறித்து பீர்க்கன்காரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: தாம்பரம் சானடோரியம் ஜெயா நகர் 2வது மெயின்ரோட்டை சேர்ந்த வெங்கட்ராமன் மனைவி ஜெயலட்சுமி (46). கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருகிறார். நேற்று மாலை வீட்டு வாசலில் நின்றிருந்த இவரிடம், பைக்கில் வந்த இருவர், ஒரு துண்டு சீட்டை காட்டி முகவரி கேட்டுள்ளனர். ஜெயலட்சுமியும் அந்த வீட்டை காட்டி வீட்டுக்குள் செல்ல திரும்பியபோது அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/24/2013 2:34:56 PM
-Updated 9/24/2013 2:34:47 PM
-Updated 9/24/2013 2:34:33 PM
-Updated 9/24/2013 2:34:23 PM
-Updated 9/24/2013 2:34:13 PM
-Updated 9/24/2013 2:34:04 PM
-Updated 9/24/2013 2:33:54 PM
-Updated 9/24/2013 2:03:16 PM
-Updated 9/24/2013 2:03:07 PM
-Updated 9/24/2013 2:02:58 PM
-Updated 9/24/2013 2:02:48 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM
-Updated 9/23/2013 2:35:11 PM