திருச்சி:திருச்சி கரூர் சாலையில் உள்ள முத்தரசநல்லூர் அடுத்த அல்லூரில் நேற்று இரவு சாலையோரத்தில் இருந்த 100 ஆண்டு பழமையான புளியமரம் மண் அரிப்பு ஏற்பட்டதால் வேரோடு சாய்ந்தது. சாலையின் நடுவே விழுந்ததால் வாகனங்கள் செல்ல இயலவில்லை. டி.எஸ்.பி அழகேசன் தலைமையில் ஜீயபுரம் போலீசார் அங்கு வந்தனர்.
முதற்கட்டமாக திருச்சியில் இருந்து கரூர் புறப்பட்ட வாகனங்களை குடமுருட்டி சோதனைச் சாவடியில் இருந்து ஜீயபுரம் வழியாக கரூர் செல்லவும், கரூரிலிருந்து வரும் வாகனங்களை ஜீயபுரம் வழியாக திருச்சி செல்லவும் நடவடிக்கை எடுத்தனர்.சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் , தீயணைப்புத்துறையினர் மற்றும் ஊர்மக்கள் ஈடுபட்டனர். பொக்லைன் உதவியுடன் மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது. இதனால், திருச்சி& கரூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/24/2013 2:34:56 PM
-Updated 9/24/2013 2:34:47 PM
-Updated 9/24/2013 2:34:33 PM
-Updated 9/24/2013 2:34:23 PM
-Updated 9/24/2013 2:34:13 PM
-Updated 9/24/2013 2:34:04 PM
-Updated 9/24/2013 2:33:54 PM
-Updated 9/24/2013 2:03:16 PM
-Updated 9/24/2013 2:03:07 PM
-Updated 9/24/2013 2:02:58 PM
-Updated 9/24/2013 2:02:48 PM
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM
-Updated 9/23/2013 2:35:11 PM