ரேஷன் அரிசி 29 மூட்டை பறிமுதல் 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது
ஊத்துக்கோட்டை:ரேஷன் அரிசி கடத்திய 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.பெரியபாளையம் பகுதியில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சிறப்பு எஸ்ஐ ஈஸ்வரன் ஆகியோர் இன்று காலை தாராட்சி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது நிற்காமல் சென்ற லாரியை போலீசார் சுற்றிவளைத்தனர். அதில் சோதனை போட்டபோது 29 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது. ரேஷன் அரிசி கடத்திவந்ததாக ஆந்திர மாநிலம் வத்தல் தடுகு பகுதியை சேர்ந்த குருவம்மா (30), அங்கம்மா (25), மாரி (23), லாரி டிரைவர் அரிகிருஷ்ணன் (32), கிளீனர் ரமணா (22) ஆகியோரை கைது செய்தனர். லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஊத்துக்கோட்டை அருகே உள்ள அரியம்பாக்கம் கிராமத்தில் வீடு, வீடாக ரேஷன் அரிசி வாங்கி கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/24/2013 2:34:56 PM
-Updated 9/24/2013 2:34:47 PM
-Updated 9/24/2013 2:34:33 PM
-Updated 9/24/2013 2:34:23 PM
-Updated 9/24/2013 2:34:13 PM
-Updated 9/24/2013 2:34:04 PM
-Updated 9/24/2013 2:33:54 PM
-Updated 9/24/2013 2:03:16 PM
-Updated 9/24/2013 2:03:07 PM
-Updated 9/24/2013 2:02:58 PM
-Updated 9/24/2013 2:02:48 PM
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM