செவிலியர் பட்டயப்படிப்பு மற்ற பிரிவு மாணவிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் வைகோ வேண்டுகோள்
சென்னை:மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:2013&14ம் கல்வி ஆண்டில் செவிலியர் பட்டயப் படிப்பில் ஏற்பட்ட குளறுபடிகளால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவில் படித்த மாணவ, மாணவிகள் மட்டுமே செவிலியர் பட்டயப் படிப்பில் சேர முடியும் என்ற நிலையை மாற்றி, கடந்த ஆட்சி காலத்தில் மேல்நிலையில் எந்தப் பிரிவில் பயின்றவர்களும் சேரலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த கல்வி ஆண்டிலிருந்து அறிவியல் பிரிவில் படித்தவர்களுக்கு முன்னுரிமை எனவும், காலி இடங்கள் இருந்தால் மற்றப் பிரிவுகளில் பயின்றவர்களை சேர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல்நிலைப் பள்ளிகளில் கணிதம், அறிவியல், கணினி அறிவியல் போன்று செவிலியர் பயிற்சிப் பிரிவும் 76 பள்ளிகளில் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் சேரும் மாணவிகள் செவிலியர் ஆகவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப் பிரிவில் சேர்ந்து படிக்கின்றனர். இவர்களுக்கும் இடமில்லை என்று சொல்வது வேதனைக்குரியது
மனிதாபிமானத்துடன் இப்பிரச்சினையை அணுகி மேல்நிலைப் பள்ளிகளில் செவிலியர் பயிற்சிப் பிரிவில் பயின்ற மாணவிகளுக்கும், அறிவியல் பிரிவில் படித்த மாணவிகளுக்கும் சமவாய்ப்பு அரசு செவிலியர் கல்லூரிகளில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/23/2013 2:51:39 PM
-Updated 9/23/2013 2:50:03 PM
-Updated 9/23/2013 2:49:40 PM
-Updated 9/23/2013 2:35:21 PM
-Updated 9/23/2013 2:35:11 PM
-Updated 9/23/2013 2:35:00 PM
-Updated 9/23/2013 2:34:30 PM
-Updated 9/23/2013 2:34:18 PM
-Updated 9/23/2013 2:33:57 PM
-Updated 9/23/2013 2:33:45 PM
-Updated 9/23/2013 2:33:36 PM
-Updated 9/23/2013 2:12:33 PM
-Updated 9/23/2013 2:12:24 PM
-Updated 9/23/2013 1:53:55 PM
-Updated 9/21/2013 12:28:14 PM