பெரியபாளையத்தில் பாதுகாப்பற்ற ஆரம்ப சுகாதார நிலையம்
ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இதனால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு பெரியபாளையம் மற்றும் ராள்ளபாடி, கொசவன்பேட்டை, கன்னிகைப்பேர், ஜெயபுரம், ஆத்துப்பாக்கம், தண்டலம், அரியப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் சிகிச்சை பெறுகின்றனர். பிரசவமும் பார்க்கப்படுகிறது. அரசு பல் மருத்துவமனையும் இங்கு செயல்படுகிறது. தினமும் 300க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத் தில் தெரு நாய் தொல்லையும், கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது. மேலும் ஊசி போடும் அறையில் நாய்கள் படுத்துக்கொள்கின்றன.
எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு வரவே அச்சப்படுகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரு நாய்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/21/2013 12:28:14 PM
-Updated 9/21/2013 12:07:22 PM
-Updated 9/21/2013 12:07:13 PM
-Updated 9/21/2013 12:07:05 PM
-Updated 9/21/2013 12:06:55 PM
-Updated 9/21/2013 12:06:47 PM
-Updated 9/21/2013 12:06:37 PM
-Updated 9/21/2013 12:03:18 PM
-Updated 9/20/2013 3:28:35 PM
-Updated 9/20/2013 2:41:40 PM
-Updated 9/20/2013 2:41:30 PM
-Updated 9/20/2013 2:41:20 PM
-Updated 9/20/2013 2:41:10 PM
-Updated 9/20/2013 2:41:00 PM
-Updated 9/20/2013 2:40:51 PM