திருவள்ளூரில் பட்டப்பகலில் துணிகரம் ரயில்வே ஊழியர் வீட்டில் 15 பவுன், பணம் கொள்ளை
திருவள்ளூர்: ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ.75 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். திருவள்ளூரில் நேற்று பட்டப்பகலில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர் மாருதி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (58). ரயில்வே ஊழியர். மனைவி விஜயகுமாரி (49). நேற்று காலை விஸ்வநாதன் வேலைக்கு புறப்பட்டு சென்றார். விஜயகுமாரி, மாமியார் கஜலட்சுமியை அழைத்துக் கொண்டு பெரம்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவு 10 மணியளவில் விஸ்வநாதன் குடும்பத்தினருடன் வீடு திரும்பினார்.
முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் பொருட்கள் சிதறி கிடந்தது. பெட்ரூமில் உள்ள பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை, ரூ.75 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் விஸ்வநாதன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையரை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/21/2013 12:28:14 PM
-Updated 9/21/2013 12:07:22 PM
-Updated 9/21/2013 12:07:13 PM
-Updated 9/21/2013 12:07:05 PM
-Updated 9/21/2013 12:06:55 PM
-Updated 9/21/2013 12:06:47 PM
-Updated 9/21/2013 12:06:37 PM
-Updated 9/21/2013 12:03:18 PM
-Updated 9/20/2013 3:28:35 PM
-Updated 9/20/2013 2:41:49 PM
-Updated 9/20/2013 2:41:40 PM
-Updated 9/20/2013 2:41:20 PM
-Updated 9/20/2013 2:41:10 PM
-Updated 9/20/2013 2:41:00 PM
-Updated 9/20/2013 2:40:51 PM