திருத்தணி:தீக்குளித்த பெண் விஏஓ சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை இறந்தார்.திருத்தணி தொலைபேசி நிலையம் பின்புறம் உள்ள வாட்டர் டேங்க் ரோடு பகுதியில் வசித்துவருபவர் தயாநிதி. இவரது மனைவி ராஜேஸ்வரி (28). இவர் கிருஷ்ணசமுத்திரம் விஏஓ.வாக பணியாற்றினார். கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்து ராஜேஸ்வரியின் கதறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அங்கு உடலில் தீக்காயத்துடன் ராஜேஸ்வரி கதறிக்கொண்டு இருந்தார். அவரை மீட்டு உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு பின் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். இந்நிலையில் ராஜேஸ்வரி, சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ராஜேஸ்வரி தீக்குளித்ததற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/21/2013 12:28:14 PM
-Updated 9/21/2013 12:07:22 PM
-Updated 9/21/2013 12:07:13 PM
-Updated 9/21/2013 12:07:05 PM
-Updated 9/21/2013 12:06:55 PM
-Updated 9/21/2013 12:06:47 PM
-Updated 9/21/2013 12:06:37 PM
-Updated 9/21/2013 12:03:18 PM
-Updated 9/20/2013 3:28:35 PM
-Updated 9/20/2013 2:41:49 PM
-Updated 9/20/2013 2:41:40 PM
-Updated 9/20/2013 2:41:30 PM
-Updated 9/20/2013 2:41:20 PM
-Updated 9/20/2013 2:41:10 PM
-Updated 9/20/2013 2:40:51 PM