அரியலூர்:அரியலூர் அருகே துப்பாக்கியுடன் வந்த 2 பேரை போலீசார் கைது செய்து, துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அரியலூர் மாவட்டம் இரும்புலிகுறிச்சி போலீசார் நேற்று வீராக்கன் என்ற கிராமம் வழியாக ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் துப்பாக்கியுடன் வந்து கொண்டிருந்தனர். அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இருவரும் வீராக்கன் கிராமத்தை சேர்ந்த குணசேகரன், தமிழ்மணி என தெரிய வந்தது.
குணசேகரன் வைத்திருந்த துப்பாக்கிக்கு லைசன்ஸ் இருந்தது. தமிழ்மணி வைத்திருந்த துப்பாக்கிக்கு லைசன்ஸ் இல்லை. தமிழ்மணியிடம் விசாரித்த போது, தான் வைத்திருந்த துப்பாக்கியும் குணசேகரனுக்கு சொந்தமானதுதான் என கூறினார். போலீசார் இருவரையும் கைது செய்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். அவை நாட்டு துப்பாக்கி ரகத்தை சேர்ந்தவை. பறவைகள் வேட்டையாட சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/3/2025 3:51:19 PM
-Updated 9/3/2025 3:51:08 PM
-Updated 9/3/2025 3:50:57 PM
-Updated 9/3/2025 3:50:42 PM
-Updated 9/3/2025 3:40:11 PM
-Updated 9/3/2025 3:31:30 PM
-Updated 9/3/2025 3:07:29 PM
-Updated 9/3/2025 3:07:16 PM
-Updated 9/3/2025 3:06:57 PM
-Updated 9/2/2025 2:33:56 PM
-Updated 9/2/2025 2:33:44 PM
-Updated 9/2/2025 2:33:35 PM
-Updated 9/2/2025 2:30:19 PM
-Updated 9/2/2025 2:30:08 PM
-Updated 8/31/2013 12:23:52 PM