திருக்காட்டுப்பள்ளி:தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த பூண்டி மாதா பேராலயம் இந்தியாவில் உள்ள 10 கத்தோலிக்க கிறிஸ்தவ பசிலிக்காக்களில் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் புனித அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை நடைபெறும். இந்த ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. முன்னதாக பூண்டி மாதா சொரூபத்தை, சிறிய சப்பரத்தில் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்கள் இறை பாடல்களுடன் சுமந்து வந்தனர்.
மாலை 5.30 மணிக்கு குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி, கொடியை புனிதப்படுத்தி கொடிமரத்தில் ஏற்றினார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வாணவேடிக்கை மற்றும் அதிர்வேட்டுகள் முழங்கின. இன்று முதல் நடைபெறும் நவநாட்கள் திருப்பலி பூஜை நடக்கிறது. செப்டம்பர் 8ம் தேதி விழாவின் சிறப்பு அம்சமான தேர் பவனி நடைபெறும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/3/2025 3:51:19 PM
-Updated 9/3/2025 3:51:08 PM
-Updated 9/3/2025 3:50:57 PM
-Updated 9/3/2025 3:50:42 PM
-Updated 9/3/2025 3:40:11 PM
-Updated 9/3/2025 3:31:30 PM
-Updated 9/3/2025 3:07:29 PM
-Updated 9/3/2025 3:07:16 PM
-Updated 9/3/2025 3:06:57 PM
-Updated 9/2/2025 2:33:56 PM
-Updated 9/2/2025 2:33:44 PM
-Updated 9/2/2025 2:33:35 PM
-Updated 9/2/2025 2:30:19 PM
-Updated 9/2/2025 2:30:08 PM
-Updated 8/31/2013 12:23:52 PM