ராணிப்பேட்டை:வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த திருவலம் கெம்பராஜபுரத்தை சேர்ந்தவர் கீர்த்தி (40). இவர் ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட லாலாப்பேட்டை & தக்காம்பாளையம் பகுதியில் இரும்பு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் இரும்பு உதிரி பாகங்கள், ராணிப்பேட்டை பெல் கம்பெனிக்கு சப்ளை செய்யப்படுகிறது. தொழிற்சாலையில் அடிக்கடி பொருட்கள் திருடு போயின. அதனால் இரவு காவலாளியாக லாலாப்பேட்டை மேட்டு தெருவை சேர்ந்த வடிவேல் (70), சிப்காட்டை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (60) ஆகியோரை கீர்த்தி பணியமர்த்தினார்.
இருவரும் வழக்கம் போல் நேற்றிரவு பணியில் இருந்தனர். அப்போது 12 மணியளவில் மர்ம நபர்கள் தொழிற்சாலைக்குள் திடீரென நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருட முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு வடிவேலு, தட்சிணாமூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று மர்ம கும்பலை பிடிக்க முயன்றனர். ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள், அங்கு இருந்த இரும்பு ராடுகளால் தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் வடிவேலு, தட்சிணாமூர்த்தி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
இன்று காலை 7 மணியளவில் தொழிற்சாலையை சுத்தம் செய்ய வந்த அஞ்சலி என்ற பெண், காவலாளிகள் இறந்து கிடந்ததை கண்டு அலறினார். இதுகுறித்து உரிமையாளர் கீர்த்திக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். தடயவியல் இணை இயக்குனர் பாரி, நிபுணர் சாந்தகுமாரி ஆகியோர் தடயங்களை சேகரித்தனர்.
பின்னர் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவலாளிகள் இறந்த தகவலறிந்த அவரது உறவினர்கள் திரண்டு வந்து கதறி அழுதனர். இதுதொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை கும்பலை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 2:35:59 PM
-Updated 10/1/2025 2:35:50 PM
-Updated 10/1/2025 2:35:40 PM
-Updated 10/1/2025 2:34:34 PM
-Updated 10/1/2025 2:34:23 PM
-Updated 10/1/2025 2:20:54 PM
-Updated 10/1/2025 2:20:43 PM
-Updated 10/1/2025 2:20:34 PM
-Updated 10/1/2025 2:20:26 PM
-Updated 10/1/2025 2:20:15 PM
-Updated 10/1/2025 2:20:04 PM
-Updated 10/1/2025 2:11:02 PM
-Updated 9/30/2013 2:14:58 PM
-Updated 9/30/2013 2:14:41 PM
-Updated 9/30/2013 2:14:31 PM