வீராணம் குழாயில் திடீர் உடைப்பு வெளியேறிய தண்ணீரில் குளம், ஏரி நிரம்பியது
திருப்போரூர்:வீராணம் ஏரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து வெளியேறிய தண்ணீரால் குளம், ஏரி நிரம்பியது. கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்து ராட்சத குழாய் வழியாக சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. கடும் வறட்சி காரணமாக வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாமல் போனது. இதனால் குடிநீர் சப்ளை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மழை பெய்து வருவதால் நேற்று முதல் மீண்டும் குடிநீர் சப்ளை தொடங்கியது.
திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதியில் நேற்று மாலை வீராணம் குழாய் வால்வு பகுதியை சோதித்து பார்த்துள்ளனர். பின் வால்வை சரியாக மூடாமல் விட்டுவிட்டதாக தெரிகிறது. இரவு திடீரென குழாயில் நீர்வரத்து அதிகரித்ததால் வால்வு பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி உள்ளது. நேற்று இரவு முழுவதும் தண்ணீர் வெளியேறியதால் காலவாக்கம் ஏரி, குளம் நிரம்பியது. இதுபோல் அங்குள்ள கிணறுகளும் நிரம்பியது. இது பற்றி அறிந்ததும் இன்று காலை குழாய் பராமரிப்பு பொறியாளர் தாண்டவராயன் மற்றும் ஊழியர்கள் வந்தனர். உடைப்பை சரிப்படுத்தி, தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர். இது சம்பந்தமாக விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 2:35:59 PM
-Updated 10/1/2025 2:35:50 PM
-Updated 10/1/2025 2:35:40 PM
-Updated 10/1/2025 2:34:34 PM
-Updated 10/1/2025 2:34:23 PM
-Updated 10/1/2025 2:20:54 PM
-Updated 10/1/2025 2:20:43 PM
-Updated 10/1/2025 2:20:34 PM
-Updated 10/1/2025 2:20:26 PM
-Updated 10/1/2025 2:20:15 PM
-Updated 10/1/2025 2:20:04 PM
-Updated 10/1/2025 2:11:02 PM
-Updated 9/30/2013 2:14:58 PM
-Updated 9/30/2013 2:14:41 PM
-Updated 9/30/2013 2:14:31 PM