சுதந்திர தினத்தில் புறநகர் பகுதியில் மது கடத்தி விற்ற 21 பேர் கைது 800 பாட்டில், 12 பைக் பறிமுதல்
ஆவடி:சென்னை புறநகர் பகுதியில் மது கடத்தி விற்ற 21 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 மது பாட்டில்கள், 12 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகளில் மது பாட்டில்களை கடத்தி வந்து பார், முட்புதர்களில் மறைத்து வைத்து விற்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில் மதுவிலக்கு பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் மங்கையர்கரசி, அம்பத்தூர் இன்ஸ்பெக்டர் நெடுமாறன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அம்பத்தூர், கொரட் டூர், திருமுல்லைவாயல், அம்பத்தூர் தொழிற்பேட்டை, பட்ட£பிராம், ஆவடி மதுரவாயல், திருநின்றவூர், திருவேற்காடு ஆகிய பகுதிகளில் மது பானங்களை கடத்தி, பதுக்கி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வானகரம் கொளஞ்சியப்பன் (49), ஒரகடம் பாக்கியராஜ் (27), ஆலப்பாக்கம் சத்தியானந்தம் (22), மண்ணூர்பேட்டை சுரேஷ் (22), வெள்ளனூர் ராஜா (28), அம்பத்தூர் ராஜேஷ் (23), அயலூர் வெங்கடேசன் (32) உள்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 மது பாட்டில்கள், 12 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 2:35:59 PM
-Updated 10/1/2025 2:35:50 PM
-Updated 10/1/2025 2:35:40 PM
-Updated 10/1/2025 2:34:34 PM
-Updated 10/1/2025 2:34:23 PM
-Updated 10/1/2025 2:20:54 PM
-Updated 10/1/2025 2:20:43 PM
-Updated 10/1/2025 2:20:34 PM
-Updated 10/1/2025 2:20:26 PM
-Updated 10/1/2025 2:20:15 PM
-Updated 10/1/2025 2:20:04 PM
-Updated 10/1/2025 2:11:02 PM
-Updated 9/30/2013 2:14:58 PM
-Updated 9/30/2013 2:14:41 PM
-Updated 9/30/2013 2:14:31 PM