திருப்பாச்சூரில் உள்ள 3 ஏக்கர் நிலம் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் கலெக்டரிடம் வி. சிறுத்தைகள் மனு
திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் வீரராகவராவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர் கொடுத்துள்ள மனு: திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் கிராமத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் 9 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் 6 ஏக்கர் நிலத்தை வீட்டு மனைகளாக பிரித்து ஏழை, எளிய ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்டது. மீதி உள்ள 3 ஏக்கர் நிலத்தையும் வீட்டு மனைகளாக பிரித்து வீட்டுமனை இல்லாத ஏழை மக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.
அரண்வாயல் ஊராட்சியில் இயங்கிவரும் பீர் கம்பெனியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சுத்திகரிக்காமல் திறந்த வெளியில் கொட்டுகின்றனர். மேலும் கழிவுநீரை கொசஸ்தலை ஆற்றில் விடுகின்றனர். இதனால் நாற்றம் அடிப்பதுடன் நிலத்தடி நீர் கருப்பாகி விட்டது. இதனால் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியவில்லை. எனவே, இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். அப்போது மாவட்ட நிர்வாகிகள் அருண் கவுதம், இளவரசு, எழில்வளவன், சுப்பிரமணி, சற்குணன் ஆகியோர் இருந்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/16/2013 2:06:09 PM
-Updated 9/16/2013 1:59:35 PM
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM