காஞ்சிபுரம், திருவள்ளூரில் சுதந்திர தின ஏற்பாடு தீவிரம்
காஞ்சிபுரம்:நாட்டின் 67 வது சுதந்திர தினவிழா நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி, நீதிமன்றம், போலீஸ் நிலையம், கருவூலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றி வைத்து சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வாளாகத்தில் உள்ள அண்ணா காவல் விளையாட்டு அரங்கத்தில் கலெக்டர் சித்திரசேனன் காலை 9 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். இதை தொடர்ந்து சுதந்திரப்போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்படுகிறார்கள். பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்படுகிறது. போலீஸ் சூப்பிரண்ட் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத், அரசு அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். பள்ளி கல்லூரி, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.
திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்ட் அலுவலக பின்புறம் உள்ள மைதானத்தில் கலெக்டர் வீரராகவராவ் காலை 9 மணியளவில் கொடியேற்றி வைக்கிறார். முன்னதாக சுதந்திர தின விழாவிக்கு வருகைதரும் கலெக்டரை, எஸ்பி ரூபேஸ்குமார் மீனா, கூடுதல் எஸ்பி செந்தில் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் தெய்வசிகாமணி ஆகியோர் வரவேற்கிறார்கள். சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/16/2013 2:06:09 PM
-Updated 9/16/2013 1:59:35 PM
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM