விபத்தில் சிக்கிய வாலிபரை காப்பாற்றிய கலெக்டர் தனது காரில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தார்
திருப்பூர்: திருப்பூர் ஓடக்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பிரவீன் (25). இவர், நேற்று தனது பைக்கில் திருப்பூர் ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். பலத்த அடிபட்டு வலியால் துடித்தார்.
அப்போது மழை பெய்ததால், அந்த வழியாக வாகனங்கள் ஏதும் வரவில்லை. கலெக்டர் கோவிந்தராஜ் வீட்டில் இருந்து அந்த வழியாக காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். ரோட்டில் வாலிபர் அடிபட்டு ரத்தக்காயத்துடன் கிடப்பதைப் பார்த்த கலெக்டர், உடனடியாக காரை நிறுத்தினார். உதவியாளர் தணிகாசலம், டிரைவர் கணேஷ் ஆகியோர் உதவியுடன் அந்த வாலிபரின் காயங்களுக்கு துணியால் கட்டுப்போட்டு, அவரை தனது காரில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்களுக்கு உடனடியாக செல்போன் மூலமாக இது குறித்து தகவல் கொடுத்தார். தயார் நிலையில் காத்திருந்த டாக்டர்கள், அடிபட்ட வாலிபரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சில மணி நேரத்துக்கு பின் பிரவீன் உள்நோயாளிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டார். உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் பிரவீன் உயிர் காப்பாற்றப்பட்டது. கலெக்டரின் மனிதநேயத்தை அறிந்த அனைவரும் பாராட்டினர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM
-Updated 9/14/2013 12:24:35 PM
-Updated 9/14/2013 12:24:16 PM