திருவண்ணாமலை அருகே 40 ஆயிரம் கேட்டு பிளம்பர் கடத்தல் கும்பல் சுற்றி வளைப்பு
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே ரூ.40 ஆயிரம் கேட்டு வாலிபரை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த கொளக்கரவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரவுத்திரி என்கிற முருகன்(25). பிளம்பர் தொழிலாளி. கடந்த ஏப்ரல் மாதம் நரிப்பள்ளி&பெரியப்பட்டி சாலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்காக பைப் லைன் அமைக்கும் வேலைக்காக தனது ஊரைச்சேர்ந்த சிலரை அழைத்து சென்றுள்ளார். அங்கு இவர்களுக்கு சரிவர கான்ட்ராக்டர்கள் சம்பளம் கொடுக்கவில்லையாம்.
இதையடுத்து திருவண்ணாமலையை சேர்ந்த வீரராகவன்(39) என்பவரின் லாரியை வாடகைக்கு பேசி, அதில் ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள பைப்புகளை கடத்தியதாக ரவுத்திரி போலீசில் சிக்கினார். இதில் லாரி பறிமுதல் செய்யப்பட்டு அரூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ரவுத்திரியை சந்தித்து, ‘லாரியை கோர்ட்டில் இருந்து மீட்டு வர ரூ.1 லட்சம் செலவாகி உள்ளது. அந்த பணத்தை நீதான் தரவேண்டும் என வீரராகவன் கேட்டுள்ளார். இதில் ரூ.40 ஆயிரம் தருகிறேன் என ரவுத்திரி தெரிவித்துள்ளார். ஆனால் பணத்தை கொடுக்க முடியவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த வீரராகவன், தனது நண்பர்கள் கண்ணக்குருக்கை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(33), திருவண்ணாமலை தேன்பழனி நகரை சேர்ந்த சிவக்குமார்(38), சேத்துப்பட்டு பரிதிபுரத்தை சேர்ந்த ராஜி(32), திருவண்ணாமலை வ.உ.சி. நகரை சேர்ந்த முருகன்(29) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் ரவுத்திரியை காரில் கடத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய ரவுத்திரி நேற்று முன்தினம் இரவு ஊருக்கு வந்துள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் ரவுத்திரியின் தாயார் சின்னபாப்பா கொடுத்த புகாரின் பேரில் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நேற்று காலை திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே வீரராகவன் உள்ளிட்ட 5 பேரை சுற்றிவளைத்தனர். இதைத்தொடர்ந்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், கத்தி, உருட்டு கட்டைகள் கைப்பற்றப்பட்டன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM