பேராவூரணியில் பலாத்காரம் செய்து சிறுமி கொலையா? வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்: குடிசைக்கு தீவைப்பு
பேராவூரணி:தஞ்சை மாவட்டம் பேராவூரணி செங்கொல்லையை சேர்ந்தவர் சோலை. கூலித்தொழிலாளி. இவரது மகள் பூஜா(8), அங்குள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பூஜா மாயமானார். சோலை அளித்த புகாரின் பேரில் போராவூரணி போலீசார் வழக்கு பதிந்து, பூஜாவை தேடினர். நேற்று மாலை பூஜாவின் உடல் ஆனந்தவள்ளி வாய்க்காலில் மிதந்தது. போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் சடலம் கிடந்த பகுதியில் அகல ரயில்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநில தொழிலாளர்கள் சிலர் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர். சிறுமியை அவர்கள் தான் பலாத்காரம் செய்து கொன்றிருக்க வேண்டும் என்று கருதி, ஆத்திரமடைந்த பொதுமக்கள் 300க்கும் அதிகமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் தொழிலாளர்களை தாக்கி குடிசைக்கு தீவைத்தனர்.
எஸ்பி தர்மராஜன், ஆர்டிஓ முருகேசன் உள்ளிட்டோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.சிறுமி கொல்லப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. உறுதியளித்தார். அதன்பின் பிரேத பரிசோதனையில், பூஜா தண்ணீரில் மூழ்கி இறந்ததற்கான தடயங்கள் காணப்பட்டது. பலாத்காரம் செய்யப்படவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.
வடமாநில தொழிலாளர்களை தாக்கி, குடிசைக்கு தீவைத்ததாக பலர் மீது பேராவூரணி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் பூஜா எவ்வாறு நீரில் மூழ்கி இறந்தார் என்றும் விசாரணை நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM