சைக்கிள் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவன் பரிதாப சாவு
திருத்தணி:திருத்தணியை அடுத்த பந்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவரது மனைவி பானு. இவர்களது மகன் பிரேம்குமார் (16). திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் 10 வகுப்பு படித்துவந்தான். நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் நேற்று காலை டியூசன் படிக்க சைக்கிளில் சென்ற பிரேம்குமார் பிற்பகல் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தான்.திருத்தணி மேல்ரோடு தொலைபேசி இணைப்பகம் அருகே சென்றுக்கொண்டு இருந்தான். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ரோட்டில் விழுந்த பிரேம்குமார் ரத்தவெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்தான்.
லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடிவிட்டார். விபத்தில் படுகாயம் அடைந்த பிரேம்குமாரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். அதற்குள் பிரேம்குமார் பரிதாபமாக உயிரிழந்தான்.திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீமராஜ், எஸ்ஐக்கள் டில்லிபாபு, மூர்த்தி சம்பவ இடத்துக்கு சென்றனர்.பிரேம்குமார் உடலை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய லாரி டிரைவர் பாஸ்கர் (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/18/2013 2:49:05 PM
-Updated 9/18/2013 2:48:56 PM
-Updated 9/18/2013 2:48:46 PM
-Updated 9/18/2013 2:48:35 PM
-Updated 9/18/2013 2:48:25 PM
-Updated 9/18/2013 2:47:49 PM
-Updated 9/18/2013 2:47:36 PM
-Updated 9/18/2013 2:47:26 PM
-Updated 9/18/2013 2:47:17 PM
-Updated 9/18/2013 2:47:08 PM
-Updated 9/18/2013 2:46:56 PM
-Updated 9/18/2013 2:46:48 PM
-Updated 9/18/2013 2:46:36 PM
-Updated 9/18/2013 2:34:55 PM
-Updated 9/18/2013 2:34:46 PM