சென்னை:சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்றிரவு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர், பூக்கடையில் உள்ள ஒரு புத்தக கடையில் நேற்று இரவு சில புத்தகங்களை வாங்கினர். அதன் விலை தொடர்பாக புத்தக கடைக்காரருக்கும், மாணவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக வெடித்தது. தகவலின் பேரில் பூக்கடை போலீசார் அங்கு வந்து மாணவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர். மாணவர்களை போலீசார் அழைத்துச்சென்றது பற்றி சட்டக்கல்லூரி விடுதி மாணவர்களுக்கு தகவல் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் மொத்தமாக கூடி, மோட்சம் தியேட்டர் அருகே திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அழைத்துச்சென்ற மாணவர்களை விடுவிக்க கோரி கோஷமிட்டனர். இது குறித்து இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் சட்டக்கல்லூரி மாணவர்களை விடுவித்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/16/2013 2:06:09 PM
-Updated 9/16/2013 1:59:35 PM
-Updated 9/14/2013 12:27:13 PM
-Updated 9/14/2013 12:27:04 PM
-Updated 9/14/2013 12:26:56 PM
-Updated 9/14/2013 12:26:47 PM
-Updated 9/14/2013 12:26:35 PM
-Updated 9/14/2013 12:26:01 PM
-Updated 9/14/2013 12:25:53 PM
-Updated 9/14/2013 12:25:38 PM
-Updated 9/14/2013 12:25:29 PM
-Updated 9/14/2013 12:25:19 PM
-Updated 9/14/2013 12:25:10 PM
-Updated 9/14/2013 12:24:51 PM
-Updated 9/14/2013 12:24:42 PM