ராயலசீமாவில் மீண்டும் பதற்றம் தமிழக வாகனங்கள் ஆந்திராவுக்கு செல்ல தடை பொதுமக்கள் அவதி
வேலூர்:ராயலசீமா பகுதிகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், தமிழக வாகனங்கள் ஆந்திராவுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று கடந்த மாதம் காங்கிரஸ் காரிய கமிட்டி அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியில் தொடர் போராட்டங்கள் நடந்துவருகிறது. இதனால், தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலமான சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, பாகாலா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தமிழக, ஆந்திர அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒருவார காலமாக போக்குவரத்து முடங்கி உள்ளது.
சரக்கு லாரிகள் மற்றும் கார் உள்ளிட்ட ஒரு சில வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. தமிழக அரசு பஸ்கள் வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. வேலூரில் இருந்து ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் ஆந்திர மாநில எல்லை வரை சென்றுவருகிறது. இந்த பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையொட்டி கடந்த 2 நாட்களாக ஆந்திராவுக்கு தமிழகத்திலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்திலிருந்தும் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் இன்று காலை முதல் தமிழக பஸ்கள் மற்றம் சரக்கு லாரிகள் ஆந்திராவுக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.தனித்தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சித்தூர், திருப்பதி ஆகிய மாவட்டங்கள் மீண்டும் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளதால் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வேலூர் மாவட்டத்திலிருந்து செல்லும் வாகனங்கள் தமிழக எல்லை பகுதிகளில் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM