Tamil Month Rasi Palan Maasi 2013
2013
10
Aug
ஆட்டோ கட்டணம் நிர்ணயம் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று அரசு பேச்சுவார்த்தை


சென்னை: ஆட்டோவுக்கு புதியதாக கட்டணம் நிர்ணயம் தொடர்பாக தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று  நடக்கிறது.  தமிழகத்தில் சுமார் 2,45,000 ஆட்டோக்களும், சென்னையில் மட்டும் 77,000 ஆட்டோக்களும் ஓடுகின்றன. ஆட்டோக்களுக்கு முறையாக கட்டணம் நிர்ணயிக்கப்படாததால்,  மக்கள் அவதிப்படுகின்றனர். கட்டணம் நிர்ணயிப்பதில் தமிழக அரசின் மெத்தன போக்கிற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்து, ரூ.10,000 அபராதமும் விதித்தது. மேலும் ஒரு மாதத்தில் புதிய கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்த கெடு வரும் 26ம் தேதி முடிகிறது.

குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 என உயர்த்த வேண்டும். அடுத்துள்ள 2 கி.மீட்டருக்கு மேல் கி.மீட்டருக்கு ரூ.15 என கட்டணம் நிர்ணயிக்க வேண்டும், கட்டாயம் டிஜிட்டல் மீட்டர் பொருத்த வேண்டுமென்றால், அரசே இலவசமாக அல்லது மானிய விலையில் டிஜிட்டல் மீட்டர்களை வழங்க வேண்டும் என்று ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழக அரசிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் பொதுமக்கள் சார்பில் நுகர்வோர் அமைப்பு, ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகள், போக்குவரத்து துறை என முத்தரப்பு பேச்சுவார்த்தை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் தலைமையில் இன்று மாலை நடக்கிறது. இதில், ஆட்டோக்களுக்கான புதிய கட்டணம் நிர்ணயம், டிஜிட்டல் மீட்டர் பொருத்துதல் உள்ளிட்டவை குறித்து பேசப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ஆட்டோவுக்கு புதிய கட்டணம் எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு அறிவிக்க உள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran