லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்திய மாணவியின் சடலம் கீழ்பாக்கத்தில் மாலை அடக்கம்
அண்ணாநகர்:லண்டனில் மர்மமாக இறந்த இந்திய மாணவியின் சடலம் விமானத்தில் இன்று காலை சென்னை கொண்டு வரப்பட்டது. மாலையில் கீழ்பாக்கத்தில் உள்ள கல்லறையில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. சென்னை முகப்பேர் மேற்கு பாடி குப்பம் பகுதியில் வசிப்பவர் நாஞ்சில் தாம்சன் (49). ஜெஜெ நகர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மகள் ஜார்ஜியானா (18). லண்டன் லிவர்பூல் யூனிவர்சிட்டியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் முதலாண்டு படித்தார். கடந்த மாதம் 12ம் தேதி லண்டனில் ஜார்ஜியானா மர்மமாக இறந்தார். தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக லண்டன் கோர்ட்டில் தாம்சன் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, ஜார்ஜியானா சடலத்தை மறு பிரேத பரிசோதனை செய்ய கோர்ட் உத்தரவிட்டது.
கடந்த 4ம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஜார்ஜியானாவின் உடல் நேற்று முன்தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று மாலை லண்டனில் இருந்து புறப்பட்ட அவர்கள், இன்று காலை 8.30 மணியளவில் சென்னை விமான நிலையத்துக்கு சடலத்துடன் வந்தனர். காலை 10.15 மணியளவில் பாடி குப்பத்துக்கு ஜார்ஜியானா உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று மாலை அண்ணாநகர் 2வது அவென்யூவில் உள்ள செயின்ட் லூக் சர்ச்சில் பிரார்த்தனைக்கு பிறகு மாலை 5.30 மணியளவில் கீழ்பாக்கம் கல்லறையில் ஜார்ஜியானா உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து தாம்சன் கூறுகையில்,எனது மகளின் 2வது பிரேத பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை. மகள் சாவில் நியாயம் கிடைக்க தமிழக முதல்வர், டிஜிபி, சென்னை கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். லண்டன் போர்னர் கோர்ட்டில் நீதி விசாரணைக்கு மனு தாக்கல் செய்துள்ளேன். லண்டன் போலீசார் விசாரணையில் நியாயம் கிடைக்காவிட்டால் ஸ்காட்லாந்து போலீஸ் உதவியை நாடுவேன் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM