தாம்பரம்: தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் ஷாம்குமார். (16) பீர்க்கன்கரணையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்தார். சமீபத்தில் நடந்த பள்ளி பருவ தேர்வுகளில் சில பாடங்களில் இவர் தோல்வி மதிப்பெண் பெற்றாராம். மனமுடைந்த ஷாம்குமார் நேற்று பள்ளி செல்வதாக கூறி சென்றார். அவரை தேடி பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது ஷாம்குமார் பள்ளிக்கே வரவில்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் பெருங்களத்தூர் பாரதி அவென்யூ பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணறு அருகே ஷாம்குமார் பள்ளி பை, செருப்பு போன்றவை இருந்தன. இவற்றை கண்ட சிலர், கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் அங்கு சென்று பார்த்தபோது தனது மகனின் பை என்பதை அறிந்து தாம்பரம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் தேடிமாணவன் ஷாம்குமாரின் சடலத்தை மீட்டனர். இது குறித்து பீர்க்கன்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM