மதுராந்தகம்: சேலம் மாவட்டம் துலுக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தனியார் பஸ்சில் சென்னைக்கு சுற்றுலா வந்தனர். சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு, நேற்று நள்ளிரவு ஊருக்கு கிளம்பினர். மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்ற லாரி மீது அந்த பஸ் மோதியது. பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதில் பஸ்சில் பயணம் செய்த தியாகராஜன் மகன் தண்டபாணி (7) உடல் நசுங்கி பலியானான். மேலும் பழனியம்மாள் (28), சின்னப்பொன்னு (50), நந்தினி (21), லட்சுமி (60), தனலட்சுமி (50), எல்லப்பன் (50), மணிகண்டன் (19) உள்ளிட்ட 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து படாளம் இன்ஸ்பெக்டர் அசோக் மேத்தா வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/5/2025 3:02:20 PM
-Updated 9/5/2025 3:00:36 PM
-Updated 9/5/2025 2:59:48 PM
-Updated 9/5/2025 2:59:20 PM
-Updated 9/5/2025 2:59:05 PM
-Updated 9/5/2025 2:58:54 PM
-Updated 9/5/2025 2:58:32 PM
-Updated 9/4/2025 5:40:42 PM
-Updated 9/4/2025 5:40:27 PM
-Updated 9/4/2025 5:35:26 PM
-Updated 9/4/2025 5:32:38 PM
-Updated 9/4/2025 5:17:41 PM
-Updated 9/4/2025 5:17:24 PM
-Updated 9/4/2025 5:17:00 PM
-Updated 9/4/2025 5:16:43 PM