அரசு பள்ளிகளை கண்காணிக்க வேண்டும் கல்விக்குழு கூட்டம் தீர்மானம்
புழல்:சோழவரம் ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கல்விக்குழு ஆலோசனை கூட்டம் வட்டார வள மையத்தில் நேற்று நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் கார்மேகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சீனிவாசன் கலந்துகொண்டு கல்விக்குழுவின் அவசியம் பற்றி பேசினார்.
பள்ளியில் உள்ள சத்துணவு மையம், பள்ளியில் அடிப்படை வசதி செய்யப்பட்டுள்ளதா என கண்காணிக்க வேண்டும். அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர். ஆசிரியர் பயிற்றுனர் மிகாவேல் நன்றி கூறினார். வட்டார வள மையம் சார்பில், சோழவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. மன வளர்ச்சி குன்றியோர், காது கேளாதவர், செவித் திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். 121 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கினர்.முகாமுக்கு தலைமை ஆசிரியர் பக்தவச்சலு தலைமை தாங்கினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/23/2013 2:55:30 PM
-Updated 8/23/2013 2:55:20 PM
-Updated 8/23/2013 2:55:10 PM
-Updated 8/23/2013 2:54:57 PM
-Updated 8/23/2013 2:51:16 PM
-Updated 8/23/2013 2:51:05 PM
-Updated 8/23/2013 2:50:55 PM
-Updated 8/22/2013 1:01:06 PM
-Updated 8/22/2013 1:00:57 PM
-Updated 8/22/2013 1:00:48 PM
-Updated 8/22/2013 1:00:35 PM
-Updated 8/22/2013 12:59:28 PM
-Updated 8/21/2013 2:03:09 PM
-Updated 8/21/2013 2:02:51 PM
-Updated 8/21/2013 2:02:43 PM