போக்குவரத்து நெரிசலால் அவதி செங்கல்பட்டு அண்ணா சாலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கோரிக்கை
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அண்ணா சாலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அண்ணா சாலையில் ஆண்டு தோறும் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு அக்டோபர் 10ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. அண்ணா சாலை பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இந்த விழா நடத்தப்படும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
விழாவின்போது ஆங்காங்கே சிறுசிறு கடைகள் அமைத்து அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கான ராட்டினம், துப்பாக்கியால் பலூன் சுடுதல் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெறும். பல மாநில வித்தியாசமான உணவக ஸ்டால்களும் இடம்பெறும். இதன் மூலம் நகராட்சிக்கு வருமானம் கிடைத்தது.
தற்போது நகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டியுள்ளதால் சாலை குறுகி வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விழா காலங்களில் கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி கவுன்சிலர் நித்யானந்தம் கூறுகையில், ‘ஆக்கிரமிப்பு தொடர்பாக நகரமன்ற கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளேன். ஆக்கிரமிப்பை அகற்றுவதாக கூறியுள்ளனர். விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற நகரமன்ற தலைவர், ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/23/2013 2:55:30 PM
-Updated 8/23/2013 2:55:20 PM
-Updated 8/23/2013 2:55:10 PM
-Updated 8/23/2013 2:54:57 PM
-Updated 8/23/2013 2:51:16 PM
-Updated 8/23/2013 2:51:05 PM
-Updated 8/23/2013 2:50:55 PM
-Updated 8/22/2013 1:01:06 PM
-Updated 8/22/2013 1:00:57 PM
-Updated 8/22/2013 1:00:48 PM
-Updated 8/22/2013 1:00:35 PM
-Updated 8/22/2013 12:59:28 PM
-Updated 8/21/2013 2:03:09 PM
-Updated 8/21/2013 2:02:51 PM
-Updated 8/21/2013 2:02:43 PM