சென்னை:மகளிர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ள சேரன் மகள் தாமினிக்கு இன்று மீண்டும் கவுன்சலிங் வழங்கப்பட உள்ளது. இயக்குனரும் நடிகருமான சேரனின் மகள் தாமினி, குடும்ப எதிர்ப்பை மீறி காதலருடன் செல்வதாக கூறினார். மகளை மீட்டுத்தருமாறு சேரன் போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தார். ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசார் தாமினிக்கு கவுன்சலிங் கொடுத்தனர்.
நேற்று முன்தினம் தாமினியிடம் உதவி கமிஷனர் சியாமளாதேவியும் பேசிப் பார்த்தார். ஆனால், அவர் காதலனுடன்தான் வாழ்வேன் என்று பிடிவாதமாக கூறி விட்டார். சேரன் தரப்பும் மகளை விட்டுக் கொடுக்க முடியாததால் மயிலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தாமினி சேர்க்கப்பட்டார்.இன்று மீண்டும் தாமினிக்கு கவுன்சலிங் வழங்கப்பட உள்ளது. காதலன் அல்லது தந்தை யாருடன் தாமினி செல்ல விரும்புகிறாரோ அவருடன் போலீசார் அனுப்பி வைக்க உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 2:23:54 PM
-Updated 8/12/2025 2:19:39 PM
-Updated 8/12/2025 2:15:21 PM
-Updated 8/12/2025 2:15:13 PM
-Updated 8/12/2025 2:15:04 PM
-Updated 8/12/2025 2:14:56 PM
-Updated 8/10/2025 12:31:56 PM
-Updated 8/10/2025 12:31:44 PM
-Updated 8/10/2025 12:31:28 PM
-Updated 8/10/2025 12:30:51 PM
-Updated 8/10/2025 12:30:41 PM
-Updated 8/10/2025 12:30:32 PM
-Updated 8/10/2025 12:30:13 PM
-Updated 8/10/2025 12:30:01 PM
-Updated 8/10/2025 12:28:40 PM