தாம்பரம்:குரோம்பேட்டை ராதா நகர் ராஜாஜி தெரு சென்சுரி பிளாட்டில் வசிப்பவர் பழனியப்பன். இவருக்கு ஒன்றரை வயதில் பாலாஜி என்ற மகன் உள்ளான். இவர்கள் இருக்கும் குடியிருப்பில் 34 குடும்பங்கள் வசிக்கிறது. குடியிருப்பு வளாகத்தில் சிறுவர்கள் விளையாட இடம் உள்ளது. அந்த இடத்தில், நேற்று மாலை சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களுடன் பாலாஜியும் விளையாடி கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் பாலாஜிக்கு உணவு கொடுக்க அவனது அம்மா செல்வி வந்தார். அப்போது, குழந்தையின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார். உடனே அங்கு தேடி பார்த் தார். கிடைக்கவில்லை. விளையாடி கொண்டிருந்த மற்ற குழந்தைகளிடம் விசாரித்துள்ளார். வாலிபர் ஒருவர் பாலாஜியுடன் விளையாடி கொண்டிருந்ததாக கூறியுள்ளனர். அவர்தான் செயினை பறித்து சென்றிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.இது குறித்து சிட்லப்பாக்கம் போலீசில் செல்வி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 2:23:54 PM
-Updated 8/12/2025 2:19:39 PM
-Updated 8/12/2025 2:15:21 PM
-Updated 8/12/2025 2:15:13 PM
-Updated 8/12/2025 2:15:04 PM
-Updated 8/12/2025 2:14:56 PM
-Updated 8/10/2025 12:31:56 PM
-Updated 8/10/2025 12:31:44 PM
-Updated 8/10/2025 12:31:28 PM
-Updated 8/10/2025 12:30:51 PM
-Updated 8/10/2025 12:30:41 PM
-Updated 8/10/2025 12:30:32 PM
-Updated 8/10/2025 12:30:13 PM
-Updated 8/10/2025 12:30:01 PM
-Updated 8/10/2025 12:28:40 PM