Tamil Month Rasi Palan Maasi 2013
2013
05
Aug
நகைகளை தர மறுத்ததால் மனைவிக்கு சரமாரி அடி கணவன், கொழுந்தன் கைது


ஊத்துக்கோட்டை:நகைகளை தர மறுத்ததால் மனைவியை தாக்கிய கணவன், அவரது தம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.வெங்கலை அடுத்த வதட்டூர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (34). இவரது மனைவி மைதிலி (23). இவர்களுக்கு ஒரு வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது. மைதிலிக்கு 12 பவுன் நகை வரதட்சணை கொடுத்தனர். திருமணத்துக்கு பிறகு லோகேஷ் வேலைக்கு செல்லாமல் குடித்துள்ளார். மனைவியின் 6 பவுன் நகையை விற்று குடித்துவிட்டார். மேலும் 6 பவுன் நகைகளை கேட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார் லோகேஷ். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று நகைகளை கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. லோகேஷ் அவரது தம்பி பாபு (31) ஆகியோர் மைதிலியை அடித்துள்ளனர். இதில் தலையில் காயம் அடைந்த மைதிலி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மைதிலி கொடுத்த புகாரின்பேரில் வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து, லோகேஷ், பாபு ஆகியோரை கைது செய்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran