மாஜி பஞ். தலைவர் மனைவி யானை மிதித்து பரிதாப சாவு 13 நாட்களாக தொடரும் அட்டகாசம்
அரூர்:அரூர் பகுதியில் மாம்பாடி அருகே முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மனைவியை யானைகள் மிதித்துக் கொன்றது. அரூர் பகுதிகளில் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து
ராகி, கம்பு, சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை தின்று தீர்த்து துவம்சம் செய்து வருகிறது. வனத்துறையினர் உதவியோடு பொதுமக்கள் தீபந்தங்களை
காட்டியும், மேளங்களை அடித்தும் யானைகளை ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்து வருகின்றனர். இவை கடந்த சில தினங்களுக்கு முன்பு
வேப்பம்பட்டி வழியாக காட்பாடி பகுதிக்கு யானை கூட்டம் சென்றது.
இதனையறிந்த வனத்துறையினர் நேற்று முன்தினம் அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது வனஅதிகாரிகளை
விரட்டி அவர்களை படாதபாடு செய்தன. நேற்று இரவு 7 மணிக்கு அதே பகுதியில் கரும்பு, மரவள்ளி மற்றும் சோளப்பயிர்களை பறித்து தின்று நாசம்
செய்தன. நள்ளிரவில் அங்குள்ள முனியப்பன் கோயிலில் வைத்திருந்த சாமிசிலைகளை தள்ளி உடைத்தன. சத்யா என்பவரின் வீட்டை உடைத்து
பயிர்களை சேதப்படுத்தியது. அதன் பின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் புகுந்தன. அங்கு கரும்புகளை
நாசப்படுத்தியதை கண்ட குமரேசன் மற்றும் இவரது மனைவி பத்மா (55) ஆகியோர் யானைகளை விரட்ட முயன்றனர்.
அப்போது திடீரென ஒரு யானை பிளிறியபடி இவர்கள் இருவரையும் நோக்கி ஓடி வந்தது. அதில் குமரேசன் தனது சகோதரர் ரங்கசாமியின் வீட்டில்
பதுங்கி தப்பினார். அவரது மனைவி பத்மா மட்டும் யானையின் பிடியில் சிக்கிக்கொண்டார். பத்மாவை யானை மிதித்து கொன்றது.இதனால் அரூர்
பகுதி மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/23/2013 2:49:22 PM
-Updated 7/23/2013 2:49:05 PM
-Updated 7/23/2013 2:48:39 PM
-Updated 7/23/2013 2:48:19 PM
-Updated 7/23/2013 2:48:02 PM
-Updated 7/23/2013 2:47:47 PM
-Updated 7/23/2013 2:41:00 PM
-Updated 7/23/2013 2:40:51 PM
-Updated 7/23/2013 2:40:43 PM
-Updated 7/23/2013 2:40:34 PM
-Updated 7/22/2013 2:10:56 PM
-Updated 7/22/2013 2:10:46 PM
-Updated 7/22/2013 2:10:33 PM
-Updated 7/22/2013 2:10:24 PM
-Updated 7/22/2013 2:07:21 PM