பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் மார்க்சிஸ்ட் பாமக தலைவர் ஜி.கே.மணி ஆவேசம்
சென்னை:பாமக தலைவர் ஜி.கே.மணி இன்று வெளியிட்ட அறிக்கை: தர்மபுரியில் திவ்யாவின் தந்தை நாகராஜன் மரணமும், இளவரசனின் மரணமும்
இயற்கை மரணம் அல்ல. அவை கவுரவ கொலைகள் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் கூறியுள்ளார். . அவரது அறிக்கையைப் படித்த பின்னர், பொதுவுடைமை சித்தாந்தம் பேச வேண்டியவர்கள் பிணத்தை வைத்து அரசியல் நடத்தும் அவலநிலைக்கு
தள்ளப்பட்டுவிட்டார்களே என்ற கவலை தான் எனக்கு ஏற்பட்டது.
நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட போது அதற்காக இரங்கல் தெரிவிக்க கூட முன்வராத மார்க்சிஸ்ட் கட்சித் தலைமை, இப்போது நாகராஜனின்
மரணமும், இளவரசனின் மரணமும் கவுரவ கொலை என்று கூறி சர்ச்சை எழுப்பப் பார்க்கிறது. இதன் நோக்கம் யாரையோ திருப்திபடுத்தி, ஏதோ லாபம்
பார்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
வாக்குகளை இழந்துவிடக்கூடாது என்பதற்காக, இப்படியெல்லாம் நடந்து கொள்வதும், தங்களின் தவறை மறைப்பதற்காக வருந்தத்தக்க ஓர் உயிரிழப்பை
கவுரவக் கொலை என்று முத்திரை குத்தி கொச்சைப் படுத்துவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் அருவருக்கத்தக்க அரசியல் ஆகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/22/2013 2:10:56 PM
-Updated 7/22/2013 2:10:46 PM
-Updated 7/22/2013 2:10:33 PM
-Updated 7/22/2013 2:10:24 PM
-Updated 7/22/2013 2:07:21 PM
-Updated 7/22/2013 2:00:01 PM
-Updated 7/22/2013 1:59:51 PM
-Updated 7/22/2013 1:58:08 PM
-Updated 7/22/2013 1:47:36 PM
-Updated 7/22/2013 1:47:26 PM
-Updated 7/22/2013 1:47:16 PM
-Updated 7/22/2013 1:47:05 PM
-Updated 7/22/2013 1:46:54 PM
-Updated 7/22/2013 1:46:41 PM
-Updated 7/20/2013 12:20:38 PM