வளசரவாக்கம் ரவுடி கொலை 3 நண்பர்கள் ஆலந்தூர் கோர்ட்டில் சரண்
பூந்தமல்லி:வளசரவாக்கம் ரவுடி கொலையில் தலைமறைவாக இருந்த நண்பர்கள் 3 பேர் நேற்று ஆலந்தூர் கோர்ட்டில் சரணடைந்தனர். சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாவரம் அண்ணா தெருவில் வசித்தவர் ராஜன் (24), பிரபல ரவுடி. இவருக்கு கொலை மிரட்டல் இருந்து வந்தது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வளசரவாக்கம் வீட்டை காலி செய்து விட்டு, குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தில் பெற்றோருடன் குடியேறி னார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்து பைக்கில் புறப்பட்டு சென்ற ராஜன் வளசரவாக்கம் எஸ்விஎஸ் நகர் மெயின் ரோடு அருகே உள்ள முட்புதரில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் சம்பவத்தன்று இரவு ராஜன் நண்பர்களான சாம்சன் (28), ஆனந்தகுமார் (26), சரண் (26) ஆகியோருடன் மது குடித்துள்ளார். இதனால் நண்பர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் தேடுவதை அறிந்ததும் மூவரும் தலைமறைவாகி விட்டனர். தனிப்படையினர் குற்றவாளிகளை காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சாம்சன், ஆனந்தகுமார், சரண் ஆகியோர் ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி மூவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து சாம்சன், ஆனந்தகுமார், சரண் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். விசாரணைக்கு பிறகு ராஜன் கொலைக்கான காரணம் தெரியவரும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/22/2013 2:10:56 PM
-Updated 7/22/2013 2:10:46 PM
-Updated 7/22/2013 2:10:33 PM
-Updated 7/22/2013 2:10:24 PM
-Updated 7/22/2013 2:07:21 PM
-Updated 7/22/2013 2:00:01 PM
-Updated 7/22/2013 1:59:51 PM
-Updated 7/22/2013 1:58:08 PM
-Updated 7/22/2013 1:47:36 PM
-Updated 7/22/2013 1:47:26 PM
-Updated 7/22/2013 1:47:16 PM
-Updated 7/22/2013 1:47:05 PM
-Updated 7/22/2013 1:46:54 PM
-Updated 7/22/2013 1:46:41 PM
-Updated 7/20/2013 12:20:38 PM