Tamil Month Rasi Palan Maasi 2013
2013
20
Jun
மகாராஷ்டிராவில் போர்வெல் குழாயில் விழுந்த 80 வயது முதியவர் மீட்பு பணி தீவிரம்


பீட்:மகாராஷ்டிராவில் 80 வயது முதியவர் ஒருவர் நேற்று 30 அடி ஆழ போர்வெல் குழாயில் தவறி விழுந்தார். அவரை மீட்கும் நடவடிக்கைகளில் போலீசார், தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வாத்வானி அருகில் உள்ள பீட் மாவட்டத்தின் குபா கிராமத்தை சேர்ந்தவர் மானிக் வேகன்டே (80). அங்குள்ள ராஜபாவ் கலே என்பவரது தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தோட்டத்தில் உள்ள 30 அடி ஆழ போர்வெல் குழாயில் நேற்று மதியம் சுமார் 1 மணிக்கு மானிக் தவறி விழுந்தார். தகவல் அறிந்து கிராமத்தினர் அங்கு திரண்டனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் இங்கு போர்வெல் தோண்டப்பட்டது. தண்ணீர் இல்லாததால் பயனற்று, மூடப்படாமல் திறந்து கிடந்தது. மானிக்கை மீட்க குழிக்கு அருகில் மற்றொரு குழி தோண்டப்படுகிறது. குழிக்குள் ஆக்ஸிஜன் செலுத்தப்படுகிறது. விரைவில் அவர் மீட்கப்படுவார் என்று அதிகாரி ஒருவர் கூறினார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,