Tamil Month Rasi Palan Maasi 2013
2013
20
Jun
காஞ்சிபுரத்தில் போலி ஆவணம் தயாரித்து 40 லட்சம் நிலம் மோசடி கணவன், மனைவிக்கு சிறை


காஞ்சிபுரம்: போலி ஆவணம் தயாரித்து ரூ.40 லட்சம் மதிப்பில் நில மோசடி செய்தது தொடர்பாக தம்பதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மலையம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜி (82). இவருக்கு பூர்வீக சொத்தான 6 சென்ட் நிலம் செங்கல்பட்டு அடுத்த வீராபுரம் கிராமத்தில் உள்ளது. சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த ஓம்சக்தி ஏஜென்சி உரிமையாளர் ராமச்சந்திரன் என்பவர் வீராபுரம் கிராமத்தில் 4.46 சென்ட் நிலம் வாங்கினார். அப்போது ராமச்சந்திரனுக்கு நிலத்தை விற்றவர்கள் ராஜிக்கு சொந்தமான நிலத்தையும் போலி ஆவணம் தயாரித்து விற்றுள்ளனர். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.

இதையறிந்த ராஜி காஞ்சிபுரம் எஸ்பி விஜயகுமாரிடம் புகார் செய்தார். இந்த புகாரினை விசாரித்து நடவடிக்கை எடுக்க நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் செங்கல்பட்டை சேர்ந்த தம்பதி நடராஜன் (63), கெங்கம்மாள் (55) ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,