Tamil Month Rasi Palan Maasi 2013
2013
20
Jun
ஆவடி அருகே சம்பவம் போதையில் ஏரியில் குளித்த தொழிலாளி மூழ்கி பலி


ஆவடி:போதையில் ஏரியில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலியானார். ஆவடி அருகே நேற்று இச்சம்பவம் நடந்தது.
ஆவடி அடுத்த கோவில்பதாகை கர்ணம் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (32). கூலி தொழிலாளி. மனைவி தேன்மொழி (30). தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறான். விஜயகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சரியாக வேலைக்கு போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று காலை உதய குமார் வீட்டில் இருந்து புறப்பட்டார். அருகில் உள்ள கடையில் மது குடித்து விட்டு மதியம் கோவில்பதாகை ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். இதில் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற உதயகுமாரால் கரைக்கு வர முடியவில்லை. தண்ணீரில் மூழ்கினார். அங்கு ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் இதை யாரும் கவனிக்கவில்லை.

 இந்நிலையில் நேற்று மாலை ஏரியில் ஆண் சடலம் மிதப்பதாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சடலத்தை மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஏரியில் மூழ்கி இறந்தது உதயகுமார் என்பது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,