ஆவடி:பைக்குடன் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்த மெக்கானிக் இறந்தார். அம்பத்தூரில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் மேனாம்பேடு மின்வாரிய காலனி 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (45). மெக்கானிக். நேற்றிரவு லட்சுமணன் நண்பரின் திருமணத்திற்கு போய்விட்டு பைக்கில் வீடு திரும்பினார். அம்பத்தூர் ஞானமூர்த்தி நகர் சர்வீஸ் சாலை வழியாக வரும்போது இருட்டில் நிலை தடுமாறி பைக்குடன் மழை நீர் கால்வாயில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே அவர் இறந்தார்.
இன்று காலையில் சடலத்தை பார்த்த அப்பகுதியினர், இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமணன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள். அம்பத்தூ£ கள்ளிகுப்பம், ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் கால்வாய் திறந்து கிடக்கிறது. இதில் தவறி விழுந்து இதுவரை 4 பேர் இறந்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/22/2013 12:30:19 PM
-Updated 6/22/2013 12:30:10 PM
-Updated 6/22/2013 12:30:01 PM
-Updated 6/22/2013 12:28:51 PM
-Updated 6/22/2013 12:24:42 PM
-Updated 6/22/2013 12:24:18 PM
-Updated 6/22/2013 12:14:18 PM
-Updated 6/22/2013 12:13:30 PM
-Updated 6/22/2013 12:10:40 PM
-Updated 6/22/2013 12:10:22 PM
-Updated 6/22/2013 12:10:00 PM
-Updated 6/21/2013 3:11:08 PM
-Updated 6/21/2013 3:10:30 PM
-Updated 6/21/2013 3:10:19 PM
-Updated 6/21/2013 3:09:15 PM