Tamil Month Rasi Palan Maasi 2013
2013
19
Jun
21.4 கோடி ஒதுக்கி ஒரு மாதமாகியும் அம்பத்தூர் ரயில்வே மேம்பால பணி தொடங்காததால் பொதுமக்கள் அவதி


ஆவடி:அம்பத்தூர் சிடிஹெச் சாலை உழவர் சந்தை அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதற்கு கீழே சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்லும் 4 ரயில் பாதைகள் உள்ளன. இந்த பாலம் 35 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. சென்னையிலிருந்து திருப்பதி மற்றும் வட மாவட்டங்களுக்கு ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் அரசு, தனியார் பேருந்துகள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இந்த பாலத்தின் வழியே சென்று வருகின்றன.

தற்போது இந்த பாலத்தின் இருபுறத்திலும் உள்ள பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்துள்ளது. சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. பாலத்தின் அடியிலும், பக்கவாட்டிலும் ஆலமரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிக டன்னுடன் கனரக வாகனங்கள் ஒரே நேரத்தில் இந்த பாலத்தை கடக்கும்போது அதிர்வுகள் ஏற்படுகின்றன. இதனால் மற்ற வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பாலத்தின் கீழே மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில்கள் 5 நிமிடத்துக்கு ஒருமுறை கடக்கும்போது ரயில் பயணிகளும் அச்சப்படுகின்றனர்.

கடந்தாண்டு ஜூலையில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற பகுதிக்குட்பட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம் அம்பத்தூரில் நடந்தது. இதில், ‘அம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தை புதுப்பிக்க ரூ.21.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் மாதத்திலேயே டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என டி.ஆர்.பாலு எம்.பி. கூறினார். ஆனால் ஒரு வருடமாகியும் இதுவரை அம்பத்தூர் மேம்பால பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் இந்த பாலம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,