மார்த்தாண்டம் அருகே பரிதாபம் 2 ஆண்டாக மகனை தேடும் பெற்றோர் துரத்தி சென்ற மர்ம நபர் யார்?
மார்த்தாண்டம்:மார்த்தாண்டம் அருகே நட்டாலம் சூரியன்விளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட். இவரது மகன் விஜய் (13). 8ம் வகுப்பு படித்தான். கடந்த 20.11.2011ல் பால் வாங்க கடைக்கு சென்றான். பின்னர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அந்த பகுதியில் விசாரித்த போது, விஜய்யை சிலர் துரத்தி சென்றதாக தகவல் கிடைத்தது. ஆனால் யார் துரத்தியது, எதற்காக துரத்தினார்கள் என்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் யாராவது கடத்தி சென்று இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் சிலர் மீது வின்சென்ட் புகார் செய்தார். போலீசார் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் மகனை கண்டுபிடித்து தருமாறு கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். உடனே சிறுவனை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசாரும் விளம்பரங்கள் செய்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். எனினும் சிறுவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர். எனினும் தொடர்ந்து சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறுவன் மாயமாகி 2 ஆண்டாகிறது. மகன் குறித்து ஏதாவது தகவல் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் தினமும் காவல் நிலையம், கோர்ட் என்று வின்சென்ட் குடும்பத்தினர் நடையாய் நடந்து வருகின்றனர். இதனால் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/19/2013 2:16:59 PM
-Updated 6/19/2013 2:16:47 PM
-Updated 6/19/2013 2:16:36 PM
-Updated 6/19/2013 2:12:55 PM
-Updated 6/19/2013 2:12:35 PM
-Updated 6/19/2013 2:12:22 PM
-Updated 6/19/2013 2:12:14 PM
-Updated 6/18/2013 3:37:39 PM
-Updated 6/18/2013 3:37:31 PM
-Updated 6/18/2013 3:36:51 PM
-Updated 6/18/2013 3:26:20 PM
-Updated 6/17/2013 2:47:32 PM
-Updated 6/17/2013 2:47:24 PM
-Updated 6/17/2013 2:47:16 PM
-Updated 6/17/2013 2:38:20 PM