Tamil Month Rasi Palan Maasi 2013
2013
11
Jun
பைக்குகள் மோதி விபத்து 2 பேர் பரிதாப பலி


போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள வடமலம் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் திருப்பதி (32). செங்கல் சூளை உரிமையாளர். போச்சம்பள்ளி அருகேயுள்ள கீழ்குப்பம் ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகன் மகன் திருமால் (25). இவர் போச்சம்பள்ளியில் காய்கறி மொத்த வியாபாரம் செய்தார். நேற்றிரவு திருமால், அவரது தம்பி முத்துவுடன் (17) ஆமணக்கம் பட்டியில் இருந்து போச்சம்பள்ளிக்கு பைக்கில் சென்றார். இதுபோல திருப்பதி, செங்கல் சூளைக்கு ஆட்களை அழைக்க பைக்கில் போச்சம்பள்ளிக்கு சென்றார்.

இரவு 8 மணியளவில் கோன னூர் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக 2 பைக்குகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பைக்கில் சென்ற 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே திருப்பதி, திருமால் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். முத்து படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,