காட்டாங்குளத்தூரில் ஓம் சக்தி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்
சென்னை:காட்டாங்குளத்தூர் ஓம் சக்தி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர், திருவள்ளூர் தெருவில் அருள்மிகு ஓம் சக்தி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் மிகவும் பழமையானது. இந்த ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெறுகிறது. மகா கும்பாபிஷேகத்தை வி.சுவாமிநாதன் சிவஹாகமரத்தினம் சுவாமிகள் நடத்தி வைக்கிறார்.
கும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்ச்சியாக இன்று காலை 8.40 மணிக்கு கணபதி ஹோமம், 10.45மணிக்கு தீப ஆராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, இரவு 7மணிக்கு விநாயகர், அம்மன், முருகன், கோபுர கலசம் ப்ரதிஷ்டை செய்து அஷ்டபந்தனம் சமர்ப்பித்தல் நடைபெறும். இரவு 8 மணிக்கு கலச ஸ்தாபிதம், முதல் கால யாக வேள்வியும், இரவு 9மணிக்கு விசேஷ த்ரவ்ய ஹோமம், பூர்ணஹீதி தீப ஆதாரனை பிரசாதம் வழங்கப்படும்.
நாளை காலை 7.20 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, 2ம் கால யாக வேள்வியும், 8 மணிக்கு தம்பதி சங்கல்பம், நாடி சத்தானம் நிகழ்ச்சி நடக்கும். இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ சக்தி முருகன் முதலான பரிவார தெய்வங்களுக்கும் ஓம் சக்தி ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 10.30 மணிக்கு மாங்கல்ய தாரணம், தீப ஆராதனை நடக்கும். தீர்த்த பிரசாதம் வழங்கப்படும். பகல் 11.30 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியை பிரபல சினிமா பாடகர் கானா பாலா தொடங்கி வைக்கிறார். இந்த மகா கும்பாபிஷேகத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று அம்மன் அருளைப் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.. நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம்.ராமசந்திரன், எம்.கோபாலகிருஷ்ணன் கவனித்து வருகிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/19/2013 2:16:59 PM
-Updated 6/19/2013 2:16:47 PM
-Updated 6/19/2013 2:16:36 PM
-Updated 6/19/2013 2:12:55 PM
-Updated 6/19/2013 2:12:35 PM
-Updated 6/19/2013 2:12:22 PM
-Updated 6/19/2013 2:12:14 PM
-Updated 6/18/2013 3:37:39 PM
-Updated 6/18/2013 3:37:31 PM
-Updated 6/18/2013 3:36:51 PM
-Updated 6/18/2013 3:26:20 PM
-Updated 6/17/2013 2:47:32 PM
-Updated 6/17/2013 2:47:24 PM
-Updated 6/17/2013 2:47:16 PM
-Updated 6/17/2013 2:38:20 PM