Tamil Month Rasi Palan Maasi 2013
2013
11
Jun
மாடம்பாக்கத்தில் பரபரப்பு கிணற்றில் வாலிபர் சடலம்


கூடுவாஞ்சேரி: விவசாய கிணற்றில் வாலிபர் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரிக்கிறார்கள். மடம்பாக்கத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள விவசாய கிணற்றில் வாலிபர் சடலம் கிடப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் வாலிபர் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 விசாரணையில் கிணற்றில் இறந்து கிடந்தவர் மதுரவாயல் வெங்காயமண்டி தெருவை சேர்ந்த தர்மன் (27) என தெரிந்தது. திருமணம் ஆகாதவர். இவர் மாடம்பாக்கம் எதற்காக வந்தார் என்பது மர்மமாக உள்ளது. காதல் விவகாரம் காரணமாக தர்மனை யாராவது கடத்தி வந்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா? அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கிறார்கள். கிணற்றில் வாலிபர் மர்மமாக இறந்து கிடந்த சம்பவத்தால் மாடம்பாக்கத்தில் பரபரப்பு நிலவுகிறது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,