கணவனுக்கு கத்தி குத்து : மனைவி, மைத்துனர் மீது கல்வீச்சு
ஆவடி: ஆவடி அடுத்த பட்டாபிராம் ஆயில்சேரி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (28). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் கஜேந்திரன் என்பவரது குடும்பத்துக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று கஜேந்திரனின் மகள் பீமாபாய் (22), மகன் கக்கன் (18) ஆகியோர் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த ஜெயச்சந்திரனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த கக்கன், கத்தியால் ஜெயச்சந்திரனை குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார். சத்தம் கேட்டு ஓடி வந்து தடுத்த அவரது மனைவி திலகவதி, மைத்துனர் அப்பு ஆகியோரை பீமாபாய் கல்லால் தாக்கியுள்ளார். பின்னர் இருவரும் தப்பி விட்டனர். படுகாயம் அடைந்த 3 பேரையும் உறவினர்கள் மீட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பட்டாபிராம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து பீமாபாய், கக்கன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 6/10/2025 4:03:53 PM
-Updated 6/10/2025 4:03:41 PM
-Updated 6/10/2025 4:03:26 PM
-Updated 6/10/2025 4:03:14 PM
-Updated 6/10/2025 4:00:32 PM
-Updated 6/10/2025 3:58:38 PM
-Updated 6/10/2025 3:58:26 PM
-Updated 6/10/2025 3:58:06 PM
-Updated 6/10/2025 3:57:54 PM
-Updated 6/10/2025 3:54:10 PM
-Updated 6/10/2025 3:53:59 PM
-Updated 6/10/2025 3:53:46 PM
-Updated 6/8/2025 12:43:12 PM
-Updated 6/6/2025 3:50:13 PM
-Updated 6/6/2025 3:45:54 PM